இந்தியா

பெங்களூருவில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர்!

DIN

பெங்களூருவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார். 

பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

நேற்று பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்றும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட நிலையில் இன்று பெங்களூருவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரும் முதல்வருடன் சென்று பார்வையிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT