சித்ரா ராமகிருஷ்ணா 
இந்தியா

சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு: சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அதன் முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு என்ன என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அதன் முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு என்ன என சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன்னிலையில் கடந்த மே-12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞரும் மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அா்ஷ்தீப் சிங்கும் ஆஜராகி வாதாடினாா். அதைத் தொடா்ந்து, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு போதிய காரணம் இல்லை என்று கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டாா்.

இதற்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மனுதாரா் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், அவா்கள் சாட்சிகளைக் கலைத்து, ஆதாரங்களை அழித்துவிடுவாா்கள் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த வழக்கு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு குறித்து விரைவில் பதிலளிக்குமாறு சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT