இந்தியா

தில்லியில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு

தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

DIN

தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. 

இதனால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தலைநகரில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லியைத் தவிர உத்தரப் பிரதேசமம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..! மெஸ்ஸி பேட்டியால் சோகம்!

சென்னை சென்டிரல் - ஆவடி இடையே ரயில் சேவை பாதிப்பு!

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT