முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் பலி

 கர்நாடகத்தில்  கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 24 மே, 2022 at 12:43 PM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகா: கர்நாடகத்தில்  கோலாப்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நகரை நோக்கி சென்று கொண்டு இருந்த போது, தானேபுரம் பகுதியில் நள்ளிரவு 12 மணி அளவில் எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகினர்.

Advertisement

காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.