இந்தியா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-பிரதமர் மோடி சந்திப்பு

DIN

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. 

குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக வாய்ப்பாக இந்த மாநாடு இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து உரையாற்றி வருகிறார்.

இருதரப்புச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , “இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செய்யவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. பூமியில் நமது கூட்டாண்மையை மேலும் நெருக்கமாக்க நான் உறுதி எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.

குவாட் மாநாட்டின்போது ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT