முகப்பு
இந்தியா

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

விசா மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
கார்த்தி சிதம்பரம்(கோப்புப்படம்)
பகிர்:

விசா மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், விசா மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்தின் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, வெளிநாட்டிலிருந்து இன்று தில்லி திரும்பும் கார்த்தி சிதம்பரம் மாலை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளார். பாஸ்கரராமனிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →