தில்லி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார் வினய்குமாா் சக்சேனா  
இந்தியா

தில்லி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார் வினய்குமாா் சக்சேனா 

தில்லியின் துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

PTI

தில்லியின் துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பய்ஜால், கடந்த வாரம் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, தில்லியின் துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவா் மாளிகை கடந்த திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து, வினய்குமாா் சக்சேனா இன்று  தில்லி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக உள்ள வினய்குமாா் சக்சேனா, அரசியல் பின்னணி இல்லாதவா் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் காா்ப்பரேட் குழுமத்தில் பணியாற்றி வந்த இவரின் செயல்திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக மத்திய அரசு கடந்த 2015-இல் நியமித்தது. 

இவரது தலைமையில் காதி துறை பன்மடங்கு வளா்ச்சி பெற்று கடந்த ஆண்டு ரூ.1.15 லட்சம் கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்தது. கடந்த 7 ஆண்டுகளில் அத்துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகக் குழுக்களிலும் அவா் இடம்பெற்றுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT