கோப்புப்படம் 
இந்தியா

போதை பொருள் வழக்கிலிருந்து ஷாருக் கான் மகன் விடுவிப்பு...காரணம் சொன்ன என்சிபி

கடந்தாண்டு, போதை பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனைக்கு பின், ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

DIN

சொகுசு கப்பலில் கண்டெடுக்கப்பட்ட போதை பொருல் தொடர்பான வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம், மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை தடுப்பு பிரிவு (என்சிபி) மேற்கொண்ட சோதனையில் போதை பொருள் சிக்கியது. 

இதுதொடர்பாக போதை தடுப்பு பிரிவு 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 14 பேரை குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானின் பெயரை போதை தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை. இதுகுறித்து என்சிபியின் மூத்த அலுவலர் சஞ்சய் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில், "ஆர்யன் கான், மோஹக் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவரும் போதை பொருளை வைத்திருந்தனர்.

அதேபோல, ஆர்யன் கான் மற்றும் ஐந்து பேருக்கு எதிரான தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான், மூன்று வாரங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இது சமூக வலைதளத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது.

குறிப்பாக, ஆர்யன் கான் வழக்கமாக போதை பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் விநியோகித்துவந்ததாகவும் போதை தடுப்பு பிரிவு தொடக்கத்தில் கூறியது. இதை, ஆர்யன் கானும் அவரது வழக்கறிஞர்களும் மறுத்தனர். சோதனையின்போது ஆர்யன் கானிடம் போதை பொருள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆர்யன் கானுக்கு எதிராக போதை தடுப்பு பிரிவு வைத்த வாதங்கள் குறித்து சிறப்பு நீதிமன்றமும் சந்தேகம் எழுப்பியது. வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளின் அடிப்படையில் இம்மாதிரியான தீவிரமான குற்றச்சாட்டுகளை நம்ப முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த அதிகாரி சமீர் வாங்கடே, ஆர்யன் கான் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் மிரட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டார். விசாரணையில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவிடமிருந்து தில்லி பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT