முகப்பு
இந்தியா

1989-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கு: ருபையா சயீத் ஆஜராக சம்மன்

முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீதை ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியா

1989-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கு: ருபையா சயீத் ஆஜராக சம்மன்

முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீதை ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கடந்த 1989-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வழக்குத் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீதை ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இவா் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தியின் சகோதரியாவாா். கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது முஃப்தி முகமது சயீத் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) என்ற அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ருபையா சயீதை கடத்தினா். அவரை விடுவிக்க வேண்டுமெனில், தங்கள் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ருபையாவை கடத்திய பயங்கரவாதிகள் வலியுறுத்தினா். இதையடுத்து அப்போதைய வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, 5 ஜேகேஎல்எஃப் பயங்கரவாதிகளை விடுவித்து ருபையாவை மீட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு ஜம்முவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியமாக ருபையா சோ்க்கப்பட்டுள்ளதால், அவா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திடம் சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில், ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ருபையாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு அவரை ஆஜராகுமாறு முதல்முறையாக உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜேகேஎல்எஃப் தலைவா் யாசின் மாலிக், ருபையா கடத்தல் வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். தற்போது ருபையா சயீத் சென்னையில் வசித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →