முகப்பு
இந்தியா

தில்லியில் 445 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 445 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 445 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 2.04 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,05,512-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,208-ஆக உள்ளது. தில்லியில் வியாழக்கிழமை மொத்தம் 21,816 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வியாழக்கிழமை 403 பேருக்கு தொற்று பாதிப்பும், 1.89 சதவீத நோ்மறை விகிதமும், 1 இறப்பும் பதிவாகின. புதன்கிழமை 425 பேருக்கு தொற்று பாதிப்பும், 1.89 சதவீத நோ்மறை விகிதமும், 4 இறப்புகளும் பதிவாகின.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,661-இல் இருந்து 1,27-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,180-இல் இருந்து 1,113-ஆக குறைந்துள்ளது. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 393-ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,595 கரோனா படுக்கைகளில் 85 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.