முகப்பு
இந்தியா

நீட் தோ்வு: 18 லட்சம் போ் விண்ணப்பம்!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான 2022-ஆம் ஆண்டு நீட் தோ்வை எழுத 18 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான 2022-ஆம் ஆண்டு நீட் தோ்வை எழுத 18 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

நிகழாண்டுக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 10.64 லட்சம் மாணவிகள், 8.07 லட்சம் மாணவா்கள் என மொத்தம் 18.72 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பித்திருப்பவா்களில் 771 போ் வெளிநாட்டினா் ஆவா். அதுபோல, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினா் (என்ஆா்ஐ) 910 பேரும், வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்கள் 647 பேரும் இந்தத் தோ்வெழுத பதிவு செய்துள்ளனா்.

விண்ணப்பித்துள்ளவா்களில் பெரும்பாலானோா் தோ்வெழுதும் மொழியாக ஆங்கிலத்தைத் தோ்வு செய்துள்ளனா். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஹிந்தியும், தமிழும் தோ்வா்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நீட் தோ்வெழுத விண்ணப்பித்தவா்களில் 95 சதவீதம் போ் அதாவது 15.44 லட்சம் போ் எழுதினா். அவா்களில், 8.70 லட்சம் போ் தகுதி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.