இந்தியா

ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்ட ராஜ்நாத் சிங்

DIN

கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படைத் தளத்திற்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டார். 

அதிநவீன கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலின் வலிமை மற்றும் திறன்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் விளக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பலின் ஆயுதத் திறன், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான நடவடிக்கைகளை சமாளிக்கும் விதம் ஆகியவை குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். 

அமைச்சருடன் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். ராஜ்நாத் சிங் தமது பயணத்திற்கு பின்னர், நீர்மூழ்கிக் கப்பலின் தயார் நிலை குறித்து பாராட்டுத் தெரிவித்தார். இந்திய கடற்படை உலகளவிலான கடற்படைகளுக்கு இணையாக முன்னணியில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக கர்நாடகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT