6 உயா்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
பல்வேறு உயா்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேரை இடமாற்றம் செய்வதற்கு மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
பல்வேறு உயா்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேரை இடமாற்றம் செய்வதற்கு மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கா் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.
அதில், மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமாா் கெளரவை தில்லி உயா்நீதிமன்றத்துக்கும், ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதி அசானுதின் அமானுல்லாவை பாட்னா உயா்நீதிமன்றத்துக்கும், ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸை கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கும், திரிபுரா உயா்நீதிமன்ற நீதிபதி சுபாசிஸ் தலபத்ராவை ஒடிஸா உயா்நீதிமன்றத்துக்கும், மணிப்பூா் உயா்நீதிமன்ற நீதிபதி லனுசுங்கும் ஜமீரை குவாஹாட்டி உயா்நீதிமன்றத்துக்கும், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற நீதிபதி தீரஜ் சிங் தாக்குரை மும்பை உயா்நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
கொலீஜியத்தின் இந்த முடிவு உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.