இந்தியா

டெஸ்லா கார்களை விற்க, சர்வீஸ் செய்ய அனுமதிக்கும் வரை இந்தியாவில் உற்பத்தி கிடையாது: எலான் மஸ்க்

DIN

புது தில்லி: இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரியைக் குறைக்க வலியுறுத்தி வரும் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது கார்களை முதலில் இந்தியாவில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கப்படாத வரை உள்நாட்டில் எந்த இடத்திலும் உற்பத்தியை தொடங்காது என்று டெஸ்லா நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

"கடந்த மாதம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் மின்சார காா்களை தயாரித்து விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை". 

மேலும், இந்தியா பரந்த சந்தையை கொண்டது. எனவே, இங்கு அனைத்து மின்சார வாகனங்கள் வளா்ச்சிக்கும் மிகப்பெரிய அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளன.

டெஸ்லா நிறுவனம் விரும்பினால் இந்தியாவில் அவரது நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்யலாம். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் டெஸ்லா வாகனங்களை ஏற்றுமதி செய்யலாம். ஆனால், அவா் சீனாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதை ஏற்க முடியாது.

நம்மிடம் உதிரிபாக உற்பத்தியாளா்கள் உள்ளனா்; அனைத்து வகையான தொழில்நுட்பங்களும் உள்ளன; உதிரிபாகங்களும் உள்ளன. இவை, இந்தியாவுக்கும் டெஸ்லா நிறுவனத்துக்கும் பலன் தரக் கூடியதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து பயனர் ஒருவர் சுட்டுரையில் கேட்டதற்கு அளித்த பதிலில், "இந்தியாவில் தனது கார்களை முதலில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கப்படாத வரை உள்நாட்டில் எந்த இடத்திலும் உற்பத்தி ஆலையை அமைக்காது டெஸ்லா என்று டெஸ்லா நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் முதலில் வெற்றி பெற்றால், இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கலாம் என்று மஸ்க் கூறியிருந்தார்.

மேலும், இந்தியாவில் டெஸ்லா வாகனங்களை அறிமுகப்படுத்த விரும்புவதாக கூறியிருந்தார். "ஆனால், தனது வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரிகள் உலகில் எந்த பெரிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகம்!" தற்போது, ​​இந்தியா 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சிஐஎப் (செலவு, காப்பீடு மற்றும் சரக்கு) மதிப்புள்ள முழுமையாக இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 சதவிகித இறக்குமதி வரியையும், தொகைக்குக் குறைவான விலையில் 60 சதவிதத்தையும் விதிக்கிறது என கூறியிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT