ஜம்மு: ஆற்றில் மினி பேருந்து கவிழ்ந்ததில் இருவர் பலி
ஜம்முவின் தாவி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஜம்முவின் தாவி ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளியன்று இரவு பிக்ரம் சௌக் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தாவி பாலத்தைக் கடக்கும்போது வேகமான வந்த மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பாலத்தின் கான்கிரீட் வேலியை உடைத்துக்கொண்டு, மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேரின் உடல்கள் தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், இன்று காலை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டால் பல்லாயின் பாலத்தில் வேகமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 27 பயணிகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
ஜம்முவில் இருந்து தோடா மாவட்டத்திற்கு பேருந்து சென்றுகொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவர்களில் 6 பேர் சிறப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.