ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் திங்கள்கிழமை போலீஸாருடன் நடைபெற்ற மோதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் அறிவிப்பின்படி, புல்வாமா மாவட்டத்தின் குண்டிபோரா பகுதியில் பயங்கரவாதியின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிடிருந்த காவலர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினாா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கான விடைகளை அறிய வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.