இந்தியா

8 ஆண்டுகள் நிறைவு: மத்திய அரசிடம் 8 கேள்விகளை எழுப்பும் டிஆர்எஸ் தலைவர் கவிதா

DIN


புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கவிதா, மத்திய அரசுக்கு 8 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினரான கவிதா, தனது சுட்டுரைப் பக்கத்தில், பொருளாதாரம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு ஜிடிபி (கேஸ், டீசல், பெட்ரோல்) மட்டுமே உயர்ந்து கொண்டே போவதாகவும், இந்தியாவின் ஜிடிபி சரிவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அச்சே தின் என்ற பாஜவின் கொள்கைப்படி, அந்த நல்ல நாளை மக்கள் எப்போதாவது பார்ப்பார்களா என்பது முதல், பிரதமர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான நிதி வரை 8 கேள்விகளை எழுப்பியுள்ளார் கவிதா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

SCROLL FOR NEXT