இந்தியா

காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற வழக்கு: காதலியின் உறவினர்கள் இருவர் கைது!

கேரளத்தில் பாரசாலாவில் காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காதலியின் உறவினர்கள் இருவரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். 

DIN

கேரளத்தில் பாரசாலாவில் காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காதலியின் உறவினர்கள் இருவரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து குற்றப்பிரிவு மூத்த அதிகாரி கூறுகையில், 

இந்த வழக்கில் தடயங்களை அழித்த குற்றத்திற்காகப் பெண்ணின் தாய் மற்றும் அவரது மாமா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட கிரீஷ்மா(22), தனது காதலனுக்கு விஷம் கொடுத்ததாக ஒப்புகொண்ட நிலையில், கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கழிப்பறை சுத்திகரிப்பானைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீரானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

திருவிதம்கோடில் உள்ள இஸ்லாமிய கலைக் கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றவர் கிரீஷ்மா. அவர் மாவட்டத்தில் உள்ள பாரசாலாவைச் சேர்ந்த 23 வயதான ஷரோனை காதலித்து வந்துள்ளார். 

கிரீஷ்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பல வழிகளில் காதலன் ஷரோனை தவிர்க்க முயன்றுள்ளார். ஆனால் எதுவும் பலனளிக்காததால் கடைசியாக அவரை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். 

அக்டோபர் 14ஆம் தேதி ஷரோனை தனது வீட்டிற்கு அழைத்து, பூச்சிக்கொல்லி கலந்த  டிகாக்ஷனை ஷரோனுக்கு கொடுத்துள்ளார். 10 நாள்களுக்கும் மேலாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் அக்டோபர் 25 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் மருத்துவர்கள் சந்தேகித்து போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 30ஆம் தேதி இரவு கிரீஷ்மா காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT