இந்தியா

காற்றின் தரம் உயரும் வரை தில்லி பள்ளிகளை மூட பரிந்துரை!

கடந்த சில நாள்களாக தில்லி காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

DIN

நாட்டின் தலைநகரான தில்லியில் காற்றின் தரம் உயரும் வரை மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த சில நாள்களாக தில்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல தில்லி மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ, தில்லி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், காற்று மாசு மிகவும் மோசமான நிலையிலுள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. காற்று மாசு சீரான நிலையை அடையும் வரை குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT