முகப்பு
இந்தியா

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக அரைநிர்வாணமாக்கி தாக்குதல்: சத்தீஸ்கரில் கொடூரம்

சத்தீஸ்கரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இருவரை அடித்து அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

Updated On : 2 நவம்பர், 2022 at 8:55 PM
பகிர்:

சத்தீஸ்கரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இருவரை அடித்து அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நர்சிங் தாஸ் மற்றும் ராம்நிவாஸ் மேகர் ஆகிய இருவரும் மாட்டுக்கறியை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றதாகத் தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதியினர் சிலர் அவர்களிடம் இறைச்சி குறித்து விசாரித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து இருவரும் தாக்கப்பட்டு அவர்களது ஆடைகள் களையப்பட்டு அரைநிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இதனை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்ட கொடுமை நடந்துள்ளது. 

இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அவ்விருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 33.5 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இருவர் பொதுவெளியில் தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர்கள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.