இந்தியா

3000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்?

DIN

3000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகிறார். 

எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வார் எனவும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதுவரை பணி நீக்கம் தொடர்பான தகவலை எலான் மஸ்க் அல்லது மைக்ரோ பிளாக்கிங் தளம் உறுதிப்படுத்தவில்லை.

ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் இல்லை என மஸ்க் மறுத்தாலும், பல உயர் நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோர் கடந்த வாரம் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியப் பிறகு நீக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள்.

இந்த முன்னாள் ட்விட்டர் நிர்வாகிகள் இருவரும் தங்கள் ட்விட்டர் சுயவிவரங்களில் இருந்து ட்விட்டரில் பணிபுரிவதை நீக்கியுள்ளனர்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து வேலை என்ற கொள்கையை மாற்றியமைக்க விரும்புவதாகவும் தெரிகிறது. டெஸ்லாவில் செய்ததைப் போலவே, எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பச் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு, எலான் மஸ்க் டெல்சா ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

SCROLL FOR NEXT