இந்தியா

குஜராத் பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அறிவிக்கவுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பானது, குஜராத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தை தற்போது பாஜக ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT