தேங்காய் அளவில் இருந்த தைராய்டு கட்டி அகற்றம் 
இந்தியா

தேங்காய் அளவில் இருந்த தைராய்டு கட்டி அகற்றம்

பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது விவசாயி ஒருவரின் தொண்டைப் பகுதியிலிருந்து தேங்காய் அளவில் இருந்த தைராய்டு கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது விவசாயி ஒருவரின் தொண்டைப் பகுதியிலிருந்து தேங்காய் அளவில் இருந்த தைராய்டு கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் தொண்டைப் பகுதியில் வளர்ந்திருந்த தேங்காய் அளவுள்ள தைராய்டு கட்டியைக் அகற்றும் போது, அவருக்கு குரல் வளம் பாதிக்கப்படாமல் காப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டைப் பகுதியில் வளர்ந்திருந்த இந்தக் கட்டியால் கடந்த ஆறு மாதங்களாக நோயாளி மூச்சு விடவும், எச்சில் விழுங்கவும் கூட சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் டாக்டர் சங்கீத் அகர்வால் கூறுகையில், இதுவரை 250க்கும் மேற்பட்ட இதுபோன்ற அறுவைசிகிச்சைகளை நான் செய்திருக்கிறேன். ஆனால் எனது வாழ்நாளில் இந்த அளவுள்ள மற்றும் எடையுள்ள தைராய்டு கட்டியை அகற்றுவது இதுவே முதல் முறை. பொதுவாக தைராய்டு சுரப்பியானது 10-15 கிராம் எடையில் 3-4 செ.மீ. அளவில்தான் இருக்கும். ஆனால் இந்தக் கட்டியானது 18-20 செ.மீ. அளவில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT