இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் கோர விபத்தில் 11 பேர் பலி: மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு! 

DIN


மத்தியப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை எஸ்.யு.வி. கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் கூறியுள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் பெதுலில் காரும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி

இந்நிலையில், பெதுலில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

மத்தியப்பிரதேசம் மாநிலம், பெதுலில் நடந்த கோர விபத்தில் 11 பேர் இறந்த தகவல் அறிந்து வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் இறந்தவர்களின் குடுபத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT