ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் 
இந்தியா

ரூ.141 கோடி சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் ஹரியாணா முதல்வர்!

ஹரியாணாவில் ரூ.141 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். 

DIN

ஹரியாணாவில் ரூ.141 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தொடங்கி வைத்தார். 

பாசாய் சௌக்கில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலம் மற்றும் குருகிராமில் பிரதான பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட மகாவீர் சௌக் ஆகியவற்றை இன்று தொடங்கி வைத்துள்ளார். 

தொடங்கிவைத்து அவர் மேலும் கூறியதாவது, 

சாலை, உள்கட்டமைப்பு மற்றும் மெட்ரோ விரிவாக்கம் ஆகிய திட்டங்களையும் குறிப்பிட்ட அவர், பாலம் விஹார் பகுதியை தில்லியின் துவாரகா செக்டார்-21 வரை இணைக்கும் மெட்ரோ பாதை விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

ஜிஎம்டிஏ மூலம் செயல்படுத்தப்படும் பிற முக்கியத் திட்டங்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அதில் 650 படுகைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி ஷீட்லா மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டுமானம் சுமார் ரூ.542 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 

மேலும் ஃபரிதாபாத் முதல் தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை வரையிலான தெற்கு புறச் சாலை பலப்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் எட்டு மேம்பாலங்கள் கட்டப்படும், இந்த திட்டத்திற்கு சுமார் 846 கோடி ரூபாய் செலவாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT