கோப்புப்படம் 
இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சம்மன்! 

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத் துறை புதிததாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத் துறை புதிததாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நேஷனல் ஹெரால்டு ஆங்கில நாளேடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் தவித்தபோது, அந்நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி வட்டியில்லா கடன் வழங்கியிருந்தது. 
அந்த கடனை அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தால் திரும்பச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோா் இயக்குநா்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தால் ரூ.90.25 கோடி கடனுக்கு சமமான பங்குகளை பெற்றுள்ளதால், இதில் நிதி மோசடி நடந்திருப்பதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். 

இந்த நிலையில் இவ்வழக்கில் நாளை மறுநாள்(நவ.7ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராகும்படி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத் துறை புதிததாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

SCROLL FOR NEXT