சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 27 வயது நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திங்களன்று மாலை இந்திராவதி ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ள மாவட்டத்தின் கோசல்னார் கிராமத்தில் மருத்துவ முகாமை நடத்திவிட்டு, திரும்பும்போது இந்தச் சம்பவம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை முடித்துவிட்டு திரும்பும்போது நடு ஆற்றில் படகு கவிழ்ந்துள்ளது. இதில்
மூன்று சுகாதாரப் பணியாளர்கள் படகைப் பிடித்துக்கொண்டு தற்காத்துக் கொண்டனர். ஆனால் பிரதீப் கௌசிக் என்பவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இப்பகுதி தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ளதால், அருகிலுள்ள பர்சூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் அடித்துச்செல்லப்பட்டவரின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக தண்டேவாடாவுக்கு அனுப்பப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.