இந்தியா

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிகார் முதல்வர்

DIN

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் கோருகிறோம் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. அமா்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில் 3 போ் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும், மற்ற இருவா் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீா்ப்பளித்தனா்.

“உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது முற்றிலும் சரி. ஆனால் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் கோருகிறோம். சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நாங்கள் தொடங்கினோம். இது மக்களின் பொருளாதார நிலையையும் தெளிவுபடுத்தும் மற்றும் அவர்களுக்கான சிறந்த திட்டங்களை வழங்க முடியும். 

சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துவிட்டால் 50 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் அதிகமாகலாம். இதற்கு மக்கள் தொகையின் அடிப்படையிலே தரப்பட வேண்டும். இதை பிகாரில் செய்து வருகிறோம், இது நாடு முழுவதும் செய்யப்பட வேண்டும். அதனால் 50 சதவிகித இட ஒதுக்கீடு அதிகரிக்கும்” என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT