இந்தியா

புணே சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: 2 பேர் காயம்! 

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஏர்வாடா மத்தியச் சிறையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறை ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். 

DIN

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஏர்வாடா மத்தியச் சிறையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறை ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். 

இச்சம்பம் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. சிறைக்குள் இருந்த மற்றொரு குழு மீது கைதிகளின் குழு கற்கள் மற்றும் ஓடுகள் வீசியதாக ஏர்வாடா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறை ஊழியர்கள் தலையிட முயன்றபோது, சிறை கைதிகளில் சிலர் கற்களை வீசி 2 சிறை ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கினர்.

காயமடைந்த சிறை ஊழியர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

புகாரின் அடிப்படையில், ஐந்து கைதிகள் பின்னர் கைது செய்யப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT