இந்தியா

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

DIN

மேற்கு நேபாளத்தில் இன்று காலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக நேற்று சக்திவாய்ந்த 6.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் ரிக்டர் அளவில் 4.1 ஆளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி,

இன்று காலை 5.13 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மாண்டுவில் இருந்து 750 கிமீ தொலைவில் உள்ள பாஜுரா மாவட்டத்தின் கப்டாட் செடெடாஹா கிராமப்புற நகராட்சியில் உள்ள கடா பகுதியை மையமாகக் கொண்டது.

புதனன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்திற்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். 

நேபாள ராணுவம் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. 

ஏப்ரல் 2015-ல், நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவுகளுமான நிலநடுக்கம் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 22,000 பேர் காயமடைந்தனர். 8,00,000 வீடுகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT