இந்தியா

பாஜக வேட்பாளராக ஜடேஜாவின் மனைவி அறிவிப்பு!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா களமிறங்குகிறார்.

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா களமிறங்குகிறார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், 182 தொகுதிகளை கொண்ட பேரவைக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

முதல் கட்டப் பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்லோடியா தொகுதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும், மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் விரம்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக களமிறக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT