முகப்பு
இந்தியா

இதுதான் எங்களுடைய பலம், எதை சொல்கிறார் மல்லிகார்ஜுன கார்கே?

ஹிமாசல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் பட்டியலில் பலர் இருப்பது காங்கிரஸின் பலவீனம் அல்ல, பலம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

ஹிமாசல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் பட்டியலில் பலர் இருப்பது காங்கிரஸின் பலவீனம் அல்ல, பலம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஹிமாசலில் இன்னும் இரண்டு நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஹிமாசல சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுந்துள்ள முதல் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட பலர் இருப்பது பலவீனம் இல்லை எனத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: ஹிமாசலில் பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமே நம்பி பாஜக தேர்தலை சந்திக்கிறது. ஏனெனில், ஹிமாசல் முதல்வரின் தலைமையிலான அரசு மாநிலத்தில் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் வேட்பாளர் யார் என்று பார்க்காதீர்கள் எனக்காக வாக்களியுங்கள் என்கிறார் பிரதமர். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் ஹிமாசலில் இருக்கமாட்டார் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஹிமாசலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கண்டிப்பாக ஆட்சியமைக்கும். பாஜக நிர்வாகத்தில் சரிவர செயல்படுவதில்லை. அதன் காரணத்தினால் காங்கிரஸ் மீது ஏதாவது குறை கூறி வருகின்றனர். எங்களிடம் மாநிலத்தின் முதல்வராக ஆகும் திறன் கொண்ட பலர் உள்ளனர். அது காங்கிரஸிம் பலம், பலவீனம் கிடையாது. 

ஹிமாசல் மக்களுக்கு காங்கிரஸின் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒரு அரசியல் கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலும் மிக முக்கியம். நாங்கள் போராடி வெல்வோம். ஹிமாசல் மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தங்களது மாநிலத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →