‘காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை’: அமித்ஷா விமர்சனம் 
இந்தியா

‘காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை’: அமித்ஷா விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா விமர்சித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா விமர்சித்துள்ளார். 

ஹிமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தலி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. 

இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம் காங்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து அவர், “காங்கிரஸ் கட்சியை கவனித்தால் தாய் மகனைத் தவிர வேறு எதையும் காண முடியாது. தில்லியிலும் ஹிமாச்சலிலும் அப்படித்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி அல்ல, அது வாரிசுகளால் பிறந்த கட்சி” எனத் தெரிவித்தார். 

மேலும் அவர், “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வது மாநிலம் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும். ஹிமாச்சலில் இரட்டை என்ஜின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டு பேசினார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT