இந்தியா

மத்திய அரசின் வளர்ப்பு பிராணிகளாக நடந்து கொள்ளும் விசாரணை அமைப்புகள்: உத்தவ் தாக்கரே

விசாரணை அமைப்புகள் மத்திய அரசின் வளர்ப்பு பிராணிகளாக நடந்து கொள்வதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

DIN

விசாரணை அமைப்புகள் மத்திய அரசின் வளர்ப்பு பிராணிகளாக நடந்து கொள்வதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கறுப்புபணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனை தலைவர்  சஞ்சய் ரௌத்துக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பையில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: சஞ்சய் ரௌத் பொய்யான வழக்கில் மீண்டும் கைது செய்யப்படலாம் என்றார்.

ஜாமீன் பெற்ற பிறகு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சஞ்சய் ரௌத் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: நான் சிறைக்கு சென்றாலும் கட்சி மற்றும் தாக்கரே குடும்பத்தினர் எனது குடும்பத்தினை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருந்தது. நான் எனது கட்சிக்காக இன்னும் 10 முறை கூட சிறை செல்லத் தயராக உள்ளேன். சிவசேனை கட்சிக்கு உத்தவ் தாக்கரே ஒருவரே தலைவர் என்றார்.

சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் இருந்து ஜாமீனில் வந்துள்ளார். சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் ரௌத்தின் கைது சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT