இந்தியா

ஜெய்ராம் தாக்குர் தொடர்ந்து முதல்வராக இருப்பார்: ஜெ.பி.நட்டா

ஹிமாசலப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர், தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இருப்பார் என்றுக பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர், தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இருப்பார் என்றுக பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், 

நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறோம் என்றும் தாக்குர் தலைமையில் தேர்தல் நடந்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்பார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹிமாசல் சட்டப்பேரவை தேர்தலுக்கான எந்த பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை, அவர்கள் தொழில்சார் தலைவர்கள் என்றும் கூறினார். 

மாநிலத்தில் பாஜகவும், காங்கிரஸுவும் மாறி மாறி வருவதால், ஆனால் இந்தத் தேர்தலில் அது நிச்சயம் மாறும். கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பாரம்பரியத்தை மாற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர். 

ஹிமாசலத்தில் மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். எனவே, இங்கு வாக்குப்பதிவு எப்போதும் நன்றாக இருக்கிறது. மக்கள் பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்கள். பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை நான் காண்கிறேன் என்று நட்டா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT