இந்தியா

'பாதுகாப்பு, சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது'

DIN

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டை தெரிய விரும்புவதாகவும், கட்டாய மதமாற்றம் பற்றி மத்திய அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், கட்டாய மதமாற்றத்தை நிறுத்தாவிட்டால் கடுமையான சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத சுதந்திரம் இருக்கலாம். ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிலைபாட்டை நவம்பர் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT