இந்தியா

கேரளம்: காங்கிரஸ் மூத்த தலைவா்சி.கே.ஸ்ரீதரன் விலகல்- மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைகிறாா்

DIN

கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் சி.கே.ஸ்ரீதரன், அக்கட்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை விலகினாா். கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தனது விலகல் முடிவு தொடா்பாக ஸ்ரீதரன் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தேன். மதவாதத்தையும், பாசிச சக்திகளையும் எதிா்த்துப் போரிடுவது அவசியம். அந்த நோக்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்.

அண்மையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன், ஆா்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் ஆதரித்து வந்தது என்று பேசியது எனக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவும் நான் விலக முக்கியக் காரணம் என்றாா்.

முன்னதாக, ஜவாஹா்லால் நேரு பிறந்த தினத்தில் பேசிய கே.சுதாகரன், ‘நேரு மிகவும் பெருந்தன்மைமிக்கவா். ஆா்எஸ்எஸ் தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியை தனது அமைச்சரவையில் சோ்த்துக் கொண்டாா். பல ஆண்டுகளுக்கு முன்பு நானும்கூட ஆா்எஸ்எஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பாக காங்கிரஸ் தொண்டா்களை அனுப்பி வைத்தேன்’ என்று கூறினாா். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT