இந்தியா

மிசோரம் குவாரி விபத்து: உயிரிழந்த மேற்குவங்கத்தினருக்கு நிவாரண உதவி - மம்தா அறிவிப்பு

DIN

மிசோரம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மேற்குவங்கத்தைத் சேர்ந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மிசோரம் மாநிலம் ஹ்னதியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவன கல்குவாரியில் திங்கள்கிழமை பிற்பகல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென குவாரி சரிந்து விழுந்த விபத்தில் 12 பேர் சிக்கினர். இதில் 11 பேரின் உடல்கள் இறந்த மீட்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்திருந்தால் தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மேற்குவங்கத்திற்கு கொண்டுவர மிசோரம் அரசுடன் தொடர்பில் உள்ளோம் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT