ராகுல் காந்தி - துஷார் காந்தி 
இந்தியா

ராகுலுடன் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்! வரலாற்று நிகழ்வு!!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வெள்ளிக்கிழமை இன்று (நவ.18) இணைந்தார். 

DIN

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வெள்ளிக்கிழமை இன்று (நவ.18) இணைந்தார். 

இதன் மூலம், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் இணைந்துள்ளதாக சமூல வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன. 

தலைமுறைகள் கடந்து இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் இணைந்து ஒன்றாகப் பேரணி சென்றது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலை குறிவைத்து, பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

மகாராஷ்டிரத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இன்று (நவ.18) காலை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. 

நடைப்பயணம் தொடங்கிய சிலமணி நேரத்தில், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ஷெகான் பகுதியில் ராகுல் காந்தியின் பேரணியில் கலந்துக்கொண்டார். 

நான் பிறந்த ஊரில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொள்வது மகிழ்ச்சி என துஷார் காந்தி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் ஒற்றுமைப்பயணத்தில் ஒன்றாக கலந்துகொண்டது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT