இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 556 ஆகக் குறைவு! 

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 556 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 17 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 556 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,68,523 ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் 15 பேர் உள்பட மொத்த 17 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,570 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,31,171ஆக பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,782 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT