பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 
இந்தியா

ராஜ்நாத் சிங் வரும் 22-ம் தேதி கம்போடியா பயணம்!

இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக கம்போடியா செல்கிறார்.

DIN

கம்போடியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டீ பான் அழைப்பின் பேரில், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக கம்போடியா செல்கிறார்.

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் தலைவர் என்ற முறையில், சீம் ரீப் என்னுமிடத்தில் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் 9 ஆவது ஆண்டு கூட்டத்தை கம்போடியா நடத்துகிறது. இந்தியா-ஆசியான் உறவுகளின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில், வரும் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்தியாவும் கம்போடியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது. 

இந்தக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் வரும் 23 ஆம் தேதி உரையாற்றுகிறார். கம்போடியா பிரதமரையும் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது இந்தியா-ஆசியான் கூட்டாண்மையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களை நடத்தும். பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

பாகிஸ்தானில் பலூச் கட்சியின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்! 14 பேர் பலி!

உடல் எடை கூடுவது தைராய்டு அறிகுறியா? - நம்பிக்கையும் உண்மையும்!

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

யுஎஸ் ஓபனில் முதல்முறை... அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் - அல்கராஸ்!

SCROLL FOR NEXT