இந்தியா

அமித் ஷாவுடன் ஜடேஜா சந்திப்பு!

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும், அவரது மனைவி ரிவாபாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்தனர்.

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும், அவரது மனைவி ரிவாபாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்தனர்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 166 வேட்பாளா்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனா். அதில், பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக களமிறக்கியுள்ளது.

ஜாம்நகர் தொகுதியில் களமிறங்கும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரி சமீபத்தில் விடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்துள்ள அமித் ஷாவை ஜாம்நகர் விமான நிலையத்தில் ஜடேஜாவும், அவரின் மனைவியும் நேரில் சந்தித்துப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT