இந்தியா

மோர்பி விபத்து எதிரொலி: உத்தரகண்டில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை! - அறிக்கை

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை என மாநில அரசிடம் பொதுப்பணித்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

குஜராத் மாநிலம் மோர்பியில் சமீபத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலத்தில் உள்ள 5 மண்டலங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் 36 பாலங்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 3262 பாலங்களில் 2618 பாலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தணிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். 

இதையடுத்து பாலங்கள் சீரமைப்புப் பணி அல்லது புதிய பாலங்கள் கட்டுவதற்கு மாநில அரசு விரைவில் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலங்கள் சீரமைப்புப் பணி, பழமையான மற்றும் பழுதடைந்த பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்ட அரசு திட்டமிட்டு இதற்காக அறிக்கையை கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT