இந்தியா

அருணாச்சல பிரதேசம், நாசிக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு!

DIN

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் புதன்கிழமை காலை 7:1 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. .

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 7:1 மணியளவில் பாசர் நகரின் 58 கி.மீ வட-மேற்குகில் பூமிக்கு அடியில்10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நாசிக்: இதேபோன்று மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் அருகே புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளது. 

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் நாசிக்கிற்கு மேற்கே 89 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT