முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் சிறுமி கடத்திக் கொலை! 3 பேர் கைது

பணத்திற்காக கடத்திச் சென்ற 11 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றதாக 3 பேரை காசியாபாத் மற்றும் புலந்த்ஷாஹரில் உள்ள நந்த்கிராமில் கைது செய்யப்பட்டதாக  காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
பகிர்:

காசியாபாத்: பணத்திற்காக கடத்திச் சென்ற 11 வயது சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக 3 பேரை காசியாபாத் மற்றும் புலந்த்ஷாஹரில் உள்ள நந்த்கிராமில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஹரியாணாவில் உள்ள சோனிபட் மாநிலத்தில் வசிக்கும் சிறுமி சோனுவின் தந்தை, கடத்தல்காரர்களிடமிருந்து வந்த அழைப்பின் பேரில், நந்த்கிராமில் உள்ள தனது பாட்டியுடன் வசித்து வந்த தனது மகள் காணாமல் போனது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்தார்.

நவம்பர் 20ஆம் தேதி சிறுமி குஷியைக் கடத்திச் சென்று, அவரது தந்தையிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக காசியாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், கடத்தியவர்கள் அமித், பப்லூ மற்றும் கம்பீர் என அடையாளம் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் பப்லூ ஞாயிற்றுக்கிழமை சிறுமியை கண்காட்சியைக் காண்பிப்பதற்காக கடத்திச் சென்று தனது கூட்டாளியான அமித்திடம் ஒப்படைத்துள்ளார். அவர் கம்பீரிடம் அவளைக் கண்காணித்து வருமாறு சொன்னதாக எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சிறுமி சோனுவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை காட்டில் வீசியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.