இந்தியா

காங்கிரஸுக்கு சாபமிடுவதற்கு பதில் மோடி இதைச் சொல்லலாமே: கார்கே

PTI

புது தில்லி: காங்கிரஸ் கட்சிக்கு சாபமிடுவதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தில் பாஜக செய்த தவறான ஆட்சிமுறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே என்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் பேசிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தேலில் திரௌபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை நடத்துவதாகவும், சமூக விரோதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சி என்றும் சரமாரியானக் குற்றச்சாட்டுகள் பிரதமர் வைத்திருந்தார்.

இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் கார்கே, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு சாபமிடுவதற்கு பதிலாக, குஜராத்தில் பாஜக செய்த தவறான ஆட்சிமுறை குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஏன் குஜராத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறீர்கள்? சத்துணவு பெற்ற, எடை குறைவான  குழந்தைகளைக் கொண்ட 30 மாநிலங்களின் பட்டியலில் குஜராத் ஏன் 29வது இடத்தில் இருக்கிறது? குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குஜராத் ஏன் 19வது இடத்தில் இருக்கிறது என்பதற்கு பதில் இருக்கிறதா? என்றும் கார்கே கேட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT