ஹிமாசலில் 6,000 அரசுப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள்!
ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் 20-க்கும் குறைவான மாணவர்கள் பயின்று வருவதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் 20-க்கும் குறைவான மாணவர்கள் பயின்று வருவதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஹிமாசலில் மொத்தம் 6,106 அரசுப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5,113 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 993 நடுநிலைப் பள்ளிகள் ஆகும்.
மாநிலத்தில் 18,028 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 15,313 பள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன.
அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் 39,906 மாணவர்களும், 26,257 மாணவிகளும் உள்பட 65,973 ஆசிரியர்கள் உள்ளனர்.
இருப்பினும், 12 தொடக்க அரசுப் பள்ளிகள் ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகின்றன. 2,969 பள்ளிகளில் ஒரு ஆசிரியரும், 5,533 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், 1,779 பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர்.
இதேபோல், 51 நடுநிலைப் பள்ளிகள் ஒரு ஆசிரியராலும், 416 இரண்டு ஆசிரியர்களாலும், 773 மூன்று ஆசிரியர்களாலும், 701 நான்கு முதல் ஆறு ஆசிரியர்களாலும் நடத்தப்படுகின்றன.
படிக்க: ’லவ் டுடே’ இதுவரை வசூல் எவ்வளவு?
10, 12-ஆம் வகுப்பு பயிலும் மேல்நிலைப் பள்ளிகளில் கூட ஆசிரியர் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளன. ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்களாலும், பத்து பள்ளிகள் 3 ஆசிரியர்களாலும், 212 பள்ளிகளில் 4 முதல் 6 ஆசிரியர்களாலும், 710 பள்ளிகளில் 7 முதல் 10 ஆசிரியர்களாலும் நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
போதிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்களின் நிலை பெரும் கவலைக்கிடமாக மாறியுள்ளன.
இதுகுறித்து உயர்கல்வி இயக்குனர் அமர்ஜித் சர்மா கூறுகையில்,
தொற்றுநோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் முயற்சி, அரசுப் பள்ளிகளில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தனியார்த் துறைக்கு இணையாக அவர்களை கொண்டு வந்துள்ளது,
மேலும், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளாக கல்வி, விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்டங்களில் கவனம் செலுத்துகிறோம்.
தனியார்ப் பள்ளிகளில் தொற்றுநோய்களின் போது அதிக கட்டண கட்டமைப்பு காரணமாக, பெற்றோர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றார்.