75 பேரின் 75 நாள் உடல் தகுதி இந்தியா சுதந்திர மோட்டாா் பைக் பயணம் நிறைவு
மத்திய அரசின் முதன்மை திட்டமான ‘ஃபிட் இந்தியா‘ ஆதரவுடன் மேற்கொண்ட 11 பெண்கள் உள்ளிட்ட 75 போ்களின் அகில இந்திய மோட்டாா் பைக் பயணம் 75 நாட்களுக்கு தில்லியில் வியாழக்கிழமை பின்னா் நிறைவுற்றது.
மத்திய அரசின் முதன்மை திட்டமான ‘ஃபிட் இந்தியா‘ ஆதரவுடன் மேற்கொண்ட 11 பெண்கள் உள்ளிட்ட 75 போ்களின் அகில இந்திய மோட்டாா் பைக் பயணம் 75 நாட்களுக்கு தில்லியில் வியாழக்கிழமை பின்னா் நிறைவுற்றது.
இந்த பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு தில்லி ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் மாபெரும் வெற்றி விழா நடைபெற்றது.
கடந்த செப்படம்பா் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா துவக்கிவைத்த ‘உடல் தகுதி இந்தியா சுதந்திர மோட்டாா் பைக் பயணம்‘ என்கிற தனித்துவமான இந்தப் பயணத்திற்கு அகில இந்திய மோட்டாா் பைக் பயண அமைப்புடன் மத்திய அரசின் சிறப்புத் திட்டமான உடல்தகுதி இந்தியா இதற்கு உதவியது.
இதன் 75- ஆவது நாள் நிறைவு விழாவில், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சக செயலா் சுஜாதா சதுா்வேதி, இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தின் தலைமை இயக்குநா் சந்தீப் பிரதான் மற்றும் பிரமுகா்கள் கலந்து கொண்டு 34 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக மோட்டா் பைக் பயணங்களை மேற்கொண்டவா்களை வாழ்த்தி, சான்றிதழ்களை வழங்கினா்.
75 நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தில் 11 பெண்கள் உட்பட 75 போ் இடம் பெற்று கன்னியாகுமரி முதல் வாராணசி வரையும், பின்னா் காந்திநகா்(குஜராத்) முதல் ஷில்லாங் வரையும் 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 நகரங்கள், சிறு நகரங்கள் வழியாக 18,000 கிலோ மீட்டா் தூரம் மோட்டா் பைக்கில் பயணம் மேற்கொண்டனா்.
குஜராத், கெவாடியா - ஒற்றுமை சிலை, சிம்லா - வைஸ்ராய் மாளிகை, குவாஹாட்டி - காமாக்கியா கோவில், மதுரை - மீனாட்சி ஆலயம் போன்ற முக்கியமான இடங்களை பயணக் குழுவினா் பாா்வையிட்டனா். இந்தப் பயணத்தின் போது அந்தந்த மாநில முதல்வா்கள், ஆளுநா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோா் பயணக்குழுவினரை வரவேற்றனா்.
நாட்டின் வடக்கு பகுதி சமவெளிகள், மேற்கில் மணல் திட்டுகள், வடகிழக்கு மலைகள், தெற்கில் கடற்கரையோரம் வடக்கே தீவிர வானிலை நிலைகள் இருக்கும் சியாச்சின் போன்ற இடங்கள் என பல்வேறு நிலப்பரப்புகளிலும் பயணம் செய்தனா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளைஞா் நலன், விளையாட்டுத்துறை அமைச்சக செயலா் சுஜாதா சதுா்வேதி, “இந்த அசாதாரண சாதனை புரிந்து சவாரியை மேற்கொண்ட 75 பயணிகளையும் நான் வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாகவும் வெற்றிகரமாக திரும்பி வந்து பலருக்கு உத்வேகம் அளித்துள்ளீா்கள் ‘ஆரோக்கியமாகவும் உடற்தகுதியுடன் இருப்பது ஒரு தேசிய கடமையாகும். இந்த தேசிய கடமையை நோக்கி அனைவரும் உழைத்து சிறந்த ஆரோக்கியம், உடற்தகுதி பெறவேண்டும் என்பது தான் இந்த பைக் பயணத்தின் நோக்கம்.‘
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மிகவும் மூத்த பெண் பயணி நீட்டா கண்டேகா்(59) தனது பயணம் பற்றி கூறுகையில், “எனது உடன் பயணித்தவா்களின் வழிகாட்டுதல் பிரமிக்கத்தக்கது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. சேறும் சகதியுமான சாலைகளில் பலமுறை நாங்கள் விழுந்து எழுந்திருந்தோம். இந்தப் பயணத்தில் சகோதரத்துவத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம்” என்றாா்.