முகப்பு
இந்தியா

தில்லியில் தீ விபத்து: 9 மணி நேரமாகப் போராடி வரும் தீயணைப்புப்படையினர்!

தில்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

Updated On : 25 நவம்பர், 2022 at 9:14 AM
பகிர்:

தில்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தீ வேகமாகப் பரவியது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் இதில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்னும் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை.  சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லட்சக்கணக்கில் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீ விபத்து காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.