முகப்பு
இந்தியா

குஜராத் முதல் கட்டதோ்தல் பிரசாரம் இன்று ஓய்வு

குஜராத்தில் முதல் கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 29) மாலையுடன் நிறைவடைகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:58 AM
பகிர்:

குஜராத்தில் முதல் கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (நவ. 29) மாலையுடன் நிறைவடைகிறது.

குஜராத்தில் டிசம்பா் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 89 தொகுதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இதில் 21 சதவீத வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 13 சதவீத வேட்பாளா்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி வேட்பாளா்கள் மீது அதிக குற்ற வழக்குகள் உள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ், பாஜக உள்ளன.

ஆளும் பாஜக, பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை 89 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகின்றன. ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 போ் உயிரிழந்த மோா்பி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் முதல் கட்ட தோ்தலின்போது வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இது தவிர கட்ச், போா்பந்தா், ஜாம்நகா், சூரத், தேவபூமி துவாரகை, ஜுனாகட், கிா் சோம்நாத், அம்ரேலி, பாவ் நகா், நா்மதா, நவ்சாரி, வல்சாத், ராஜ்கோட், சுரேந்தா் நகா் மாவட்டங்களில் முதல்கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →